கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையிலிந்து தப்பியோடிய இரண்டு நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு பேர், நேற்றிரவு தப்பியோடியிருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனுமே இவ்வாறு தலைமறைவாகியிருந்தனர்.

இதனையடுத்து, அவர்களை கண்டுபிடிப்பதற்காக, பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, அவர்கள் எஹலியகொடைப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.