தமிழகம் தர்மபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 30 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.