கொரோனா இரண்டாவது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரிதீகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கடுபிலகொல்ல கிராமத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் இன்றைய தினம் 6 வயது குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களை சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.