13ஆவது IPL தொடரின் வெற்றிக் கிண்ணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி சுவீகரித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான மாபெரும் இறுதிப்போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நேற்று இரவு இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பில் Shreyas Iyer 65 ஓட்டங்களையும், Rishabh Pant 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

157 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18 தசம் 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், Rohit Sharma 68 ஓட்டங்களையும், Ishan Kishan 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதனை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது தடவையாகவும் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இதன் மூலம், IPL வரலாற்றில் 5 தடவைகள் கிண்ணத்தை வென்ற ஒரே அணி எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி தனதாக்கியுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் Trent Boult தெரிவு செய்யப்பட்டார்.