ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணிக்கு புதுமுக தமிழ் வீரர்களை இணைத்துக்கொள்ள தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களின் முழு பங்களிப்புடன் காணப்படுகின்ற ஒரேயொரு அணியாக ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி விளங்குகின்றது.

ஏனைய அனைத்து அணிகளின் உரிமமும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த அணியை கொள்வனவு செய்வதற்காக பாரியளவிலான நிதியை முதலீட்டாளர்கள் செலுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி, அணிக்காக பாரிய செலவீனங்களை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தமது அணி நிலையாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே முதல் போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அணியின் முகாமைத்துவத்துடன் நெருங்கி பழகும் ஒருவர், ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி நிலையான இடத்தை பெற்றதன் பின்னரே, புதுமுக வீரருக்கு அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் வியாஸ்காந்த் என்ற வீரருக்கு அண்மையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

தனது முதலாவது போட்டியிலேயே வியாஸ்காந்த், அஞ்சலோ மெத்திவ்ஸின் விக்கெட்டை வீழ்த்தி, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதலாவது விக்கெட்டை தன்வசப்படுத்திக் கொண்டார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் தவிர, குறித்த அணியில்; மேலும் சில தமிழ் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஏனையோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றமை குறித்து, அணியின் முகாமைத்துவம் அவதானம் செலுத்தி வருவதாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும், ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.