யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் மருத்துவ வல்லுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறித்த நரம்பியல் மருத்துவ வல்லுனர் அண்மையில் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவரே முன்வந்து பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறித்த மருத்துவர் சுகாதார துறையினருக்கு வழங்கப்பட்ட கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post யாழில் கொரோனா தடுப்பூசி போட்ட வைத்தியருக்கு கொரோனா! appeared first on Tamil News.

Powered by WPeMatico