கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக வவுனியா போதனா வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரும் உடல்நலக்குறைவு கரணமாக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன்போது குறித்த நோயாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் வவுனியா போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை தருவதை தவிர்த்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்