இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி Manchester இல் நேற்று இடம்பெற்றது

இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய, இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் Glenn Maxwell தெரிவு செய்யப்பட்டுள்ளார்.