முன்னணி கழகங்களுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுத் தொடரொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுத் தொடரில் 26 அணிகள் பங்குபற்றவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மார்ச் 4 முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 16 ஆம் திகதி காலிறுதி போட்டியும், மார்ச் 18 ஆம் திகதி அரையிறுதி போட்டியும், இறுதிப் போட்டி மார்ச் 20 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by WPeMatico