பாதுகாப்பான தேசத்திற்காக மக்கள் வழங்கிய ஆதரவுக்கு அமைய தொடர்ந்தும் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுபரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற இரண்டு சவால்களையும் புதிய ஆண்டில் வெற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியதுவம் கொடுத்து, புதிய பொருளாதார மறுமளர்ச்சி மற்றும் அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.