இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளின் பாடசாலைகளும் திட்டமிட்டபடி எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படும்.

மேலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் அசிரியர்கள் மட்டத்திலான கூட்டங்களை அடுத்துவரும் நாட்களில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு தேவையான சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டே, பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மறு அறிவித்தல் வர‍ை தொடர்ந்தும் பூட்டப்பட்டிருக்கும் என்றும் அங்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.