நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் கொரோன தொற்றாளர்கள் மூவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குறித்த கொரோனா தொற்றாளர்கள் அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய,கொரோனாதொற்றாளர்கள் மூவரையும் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி,கொரோன தொற்றாளராக அடையாளங்காணப்பட்ட நபர்களுள் ஒருவர், தலவாக்கலை சென்கிளயார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கொரோனா தொற்றாளராக அடையாளங்காணப்பட்ட பெண்ணின் கணவர் என் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி கொழும்பு, தெமட்டகொடை பகுதியிலிருந்து வந்து தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இவர் இரகசியமாக தங்கியுள்ளார்.
எனினும், பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து PCR முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபருக்கு முன்னெடுக்கபட்ட PCR பரிசோதனைகளின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.