நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 190 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 964 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டின் 64 கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 934 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 565 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 817 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 583 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது