பொதுத் தேர்தல் நிறைவடைந்து உத்தியோகபூர்வ பெறுபேறுகள் வெளியிடப்பட்டு நிறைவடைந்த தினம் முதல் ஒருவார காலம் நிறைவடையும் வரையில், பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை சட்ட பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரான சட்டத்தரணி ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.