திருகோணமலையில் சடுதியாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருகோணமலை நகரில்இன்று திங்கட்கிழமை மூன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இரண்டு தனியார் வங்கிகள் மூடப்பட்டன.

இன்று திங்கட்கிழமை மாலை மத்திய வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியும்,என்.சீ.வீதியில் அமைந்துள்ள மற்றொரு தனியார் வங்கியுமே மூடப்பட்டவையாகும் .

மத்தியவீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் கடமை புரியும் ஒரு பெண் ஊழியருக்கும் அவரின் தாயாருக்கும் மற்றும் என்.சீ. வீதியில் உள்ள வங்கியில் கடமை புரியும் அந்தப்பெண்ணின் கணவருக்கும் செய்யப்பட்ட அன்டிஐன் பரிசோதனையின் அடுத்தே இரு தனியார் வங்கிகளும் மூடப்பட்டன.