கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தொடர் மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை அண்மித்த பகுதிகளில், இன்றும் நடமாடும் இலவச கிளினிக் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

– Advertisement –

இதற்கமைய, முதலாவது நடமாடும் சேவை, முகத்துவாரம் மெத்சத உயன தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியை அண்மித்து கடந்த 16ஆம் திகதி காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், புளூ மென்டல் சிறிசந்த உயன (සිරිසද උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து இன்றைய தினமும்,

மாளிகாவத்தை NHS குடியிருப்புத் தொகுதியை அண்மித்து நாளையும்,

முகத்துவாரம் ரந்திய உயன (රන්දිය උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 21 ஆம் திகதியும்,

புளூமெண்டல் சிறிமுத்து உயன (සිරිමුතු උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 23 ஆம் திகதியும்,

தொட்டலங்க முவதொர உயன (මුවදොර උයන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 24 ஆம் திகதியும்,

முகத்துவாரம் சிறிசந்த செவன (සිරිසද සෙවණ) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 25 ஆம் திகதியும்,

முகத்துவாரம் ரன்முத்து செவன ( රන්මුතු සෙවන) குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 26 ஆம் திகதியும்,

முகத்துவாரம் சக்ஹிரு செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 27 ஆம் திகதியும்,

முகத்துவாரம் லக்ஹிரு செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 28 ஆம் திகதியும், இந்த சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இலவச சேவைகள், மேற்கூறப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும், காலை 9.00 மணிக்கு இடம்பெறும் என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.