கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் சாய்ந்தமரு பிரதேசம் ஒரு பகுதியாக இருந்தது. சாய்ந்தமருவை தனியான ஒரு உள்ளுராட்சி அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கைக்கு அடுத்து சாய்ந்தமரு பகுதி பிரடிதசத்தை நகரசபை உள்ள தனி உள்ளுராட்சி அமைப்பாக எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் விதத்தில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொழுத்துடன் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு கல்முனைத் தொகுதியில் நான்கு உள்ளுராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றினைக்கப்பட்டது.

அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமரு பகுதியை ஒரு நகரசபையாக உருவாக்கி தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் செய்துவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

thamillanka.com