தெற்கு ஆபிரிக்க நாடான Eswatini இன் பிரதமர் Ambrose Dlamini கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

52 வயதான Ambrose Dlamini தென்னாபிரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் மிகச் சிறிய நாடான Eswatini முழுமையான முடியாட்சி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.