இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.

மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் மையங்களிலும் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அடங்கிய இற்றைப்படுத்தப்பட்ட பட்டியலும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களில் பதிவான கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த வரைபடத்தையும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பான முழுமையான பட்டியலையும் இதன் தொடர்ச்சியாக பார்வையிடலாம்.