காணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை 5:00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம சேவகர் பிரிவு அக்கரைப்பற்று நகர கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 01 கிராம சேவகர் பிரிவு, ஒலுவில் 02 கிராம சேவகர் பிரிவு, அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆலையடிவேம்பு பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8/1 கிராம சேவகர் பிரிவு,அக்கரைப்பற்று 8/3 கிராம சேவகர் பிரிவு,அக்கரைப்பற்று 09 கிராம சேவகர் பிரிவுஎன்பனவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளன.