களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கமைய, பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுமுல்ல, போகஹவத்த, கிரிமந்துடுவ, கோராவல, அடுலுகம மேற்கு, கலகஹமண்டிய மற்றும் பமுனுமுல்ல முஸ்லிம் கிராம சேவையாளர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்குமென அரசாங்கத் தகவல் திணைக்கள்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.