கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் உடைந்து வீழந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என

தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

கட்டிடம் உடைந்து விழும் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் அது தொடர்பில் ஏனையவர்களுக்கு அறிவிப்பது ஒருவரின் தார்மீக கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டி, பூவெலிகட பிரசேதத்தில் 5 மாடிக் கட்டிடமொன்று மற்றுமொரு கட்டிடமொன்றின் மீது உடைந்து வீழ்ந்ததில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.