கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 22 விமான சேவைகள் வழங்கி சாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சுமார் 1,504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இக் காலப்பகுதியில், 12 விமான சேவைகள் ஊடாக 943 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேநேரம், 10 விமான சேவைகள் மூலம் 561 பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஒரே நாளில் அதிகளவான சேவைகள் வழங்கியுள்ளமை சுட்டிக்காடடத்தக்கது.

The post கட்டுநாயக்க விமான நிலையம் ஓர் நாளில் படைத்துள்ள சாதனை! appeared first on Tamil News.

Powered by WPeMatico