கடலை மா முறுக்கு!
தேவையான பொருட்கள்:
1½ சுண்டு கடலை மா
1½ சுண்டு அவித்த கோதுமை மா
1 தே.க மஞ்சள்தூள் (+/-)
3 தே.க மிளகு சீரகத்தூள் (+/-)
3 தே.க மிளகாய்த்தூள் (+/-)
6 தே.க எள்ளு (+/-)
உப்பு
எண்ணெய்
தண்ணீர் (இளஞ்சூடு)
செய்முறை:
கடலை மா, அவித்த கோதுமை மா, மிளகு சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,எள்ளு மற்றும் உப்புச் சேர்த்து, ஒன்றாககக் கலக்கவும்.
மாக்கலவையினுள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடேற்றும்.
முறுக்கு உரலில் முறுக்கு மாவை வைத்து ஒரு பேக்கிங் பேப்பரில் அல்லது இடியப்பத் தட்டில் விரும்பிய வடிவில் புளிஞ்சு, சூடான எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான முறுக்கு தயார்!
குறிப்பு:
1 சுண்டு = 397 கிராம் ரின்பால் / மில்க்மெய்ட் ரின்னில் மூவி அளந்து எடுப்பது.
விரும்பினால் மிளகுசீரகத்தூள் அளவைக் குறைத்து, சின்னச்சீரகம் அல்லது ஓமம் சேர்த்தும் முறுக்கு செய்யலாம்.