விஞ்ஞானிகள், முதன்முறையாக, நீருக்கடியில் கைதட்டி ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் நீர்நாய்களின் விடியோவைப் பதிவு செய்துள்ளனர். மற்ற கடல் பாலூட்டி இனங்கள் தங்கள் உடலால் அல்லது வால் மூலம் தண்ணீரை அறைந்து இதேபோன்ற தாள ஒலிகளை உருவாக்குகின்றன. ஆனால், கை தட்டி பேசிக்கொள்ளும் விலங்குகளில் இதுவே முதன்மையானதாகும்.

நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பென் பர்வில்லே பதிவுசெய்த காட்சிகள் தான், நீருக்கடியில் கைதட்டி பேசிக்கொள்ளும் சாம்பல் நிற நீர்நாய்களின் முதல் வீடியோ ஆகும்.

இனச்சேர்க்கை பருவத்தில் நீர்நாய்கள் கைதட்டுவது தன்னுடைய துணைகளுக்கு வலிமையைக் காண்பிப்பதற்காகவும், போட்டியாளர்களைத் தடுக்கவும் பயன்படுகிறதாம். மோனாஷ் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஒரு ஆய்வையும் வெளியிட்டுள்ளனர்.

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் அக்குவாரியம்களில் விலங்கு நிகழ்ச்சிகளில் நீர்நாய்கள் கைதட்டுவது பிரபலமாக அறியப்பட்டாலும், முன்னணி எழுத்தாளர் டாக்டர் டேவிட் ஹாக்கிங் கூறுகையில், “மிருகக்காட்சிசாலையின் விலங்குகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக்காக கைதட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த சாம்பல் நிற நீர்நாய்கள் அதை தங்கள் விருப்பப்படி கடலில் செய்கின்றன” என்று தெரிவித்தார். ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்களால் கவனிக்கப்பட்டபோது, ​​கைதட்டலின் சத்தம் காற்றழுத்தம் இல்லாததால் அவர்களை ஆச்சரியப்படுத்தியது.

கைதட்டினால் உருவாகும் உயர் அதிர்வெண் சத்தம் மிகவும் சத்தமாக இருப்பதால் அது பின்னணி இரைச்சலைக் குறைத்து அருகிலுள்ள மற்ற நீர்நாய்களுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்பும்.

துணையை ஈர்ப்பதற்கும் போட்டியாளர்களை பயமுறுத்துவதற்கும் பயன்படுவதால், கைதட்டல்கள் நீர்நாய்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

thamillanka.com