
பிரித்தானியாவுக்குப் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பிரித்தானியாவுக்குப் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஏற்கனவே குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடுகள் எவையும் நீக்கப்படவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை மறுதினம் பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 மணி முதல் இந்த பயண அனுமதி நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அன்றைய தினம் முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்கும் இலங்கை உள்ளிட்ட குறித்த நாடுகளின் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறைவடைந்துள்ளமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.