அமெரிக்காவில் இந்த வருடம் 3 இலட்சத்து 80 ஆயிரம் காணொளிககளை நீக்கியுள்ளதாக டிக்டோக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவை தளமாகக் கொண்டியங்கும் டிக்டோக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டோக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் தமது நிறிவனத்தின் கொள்கைகளை மீறும் வகையிலான 3 இலட்சத்து 80 ஆயிரம் காணொளிகளை இந்த ஆண்டு டிக்டோக் நிறுவனம் நீக்கியுள்ளது.

அத்துடன், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிட்டதற்காக ஆயிரத்து 300 கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.