சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் பத்துளுஓய பகுதியில் நிருத்த்திவைக்கப்பட்ட லொறியின் மீதி மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபர் முந்தலம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தாரக மாரசிங்க என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் லொரி ஓட்டுநர் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளை புத்தளப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

thamillanka.com