அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது நீங்கள் கட்டாயம் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும் பிப்ரவரி மாத இறுதியில் ட்ரம்ப் இந்தியா வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப் வருவதற்கான திகதி இன்னும் முடிவாகாத நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன் இந்தியா வர டிரம்ப் ஆர்வமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகளை இரு நாடுகளும் செய்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் ரத்து செய்தது. ட்ரம்ப் இந்தியா வரும் பட்சத்தில் மீண்டும் இந்த சலுகையை அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் அமெரிக்க அதிபரின் இந்தியா வருகை மிக முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.

thamillanka.com