அடேங்கேப்பா கோடியில் தவழும் பிச்சை கேட்கவே தலை சுத்துகிறது. நாங்கள் எல்லாம் இருந்து என்ன பிரியோசனம் பிச்சைக்கு முன் நீங்கள் எல்லாம் துச்சம் இதை நான் சொல்லவில்லை

திறமைக்கு என்றுமே முடிவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் தான் கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட் (Alphabet] தலை மை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை, தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

கூகுள் நிறுவனத்தை மறு சீரமைக்கும் முயற்சியில் ஆல்பாபெட் நிறுவனம், கடந்த அக்டோபர் 2, 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின் அது கூகுள் மற்றும் பல கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனமாக மாற்றப்பட்டது.

இதன் தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜ்ஜூம், இதன் தலைவராக செர்ஜி பெரினும் நிர்ணயிக்கப்பட்டனர். இந்த ஆல்பாபெட் நிறுவனம் இணைய சேவைகள் தவிர வேறு வணிகங்களின் செயல்படும் குழு நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்கும்.

அதே நேரம் முக்கிய கூகுள் இணைய சேவை வணிகத்தை தூய்மையான மற்றும் பொறுப்புறக்கூடியதாக மாற்றுவதற்கான நிறுவனமாக ஆல்பாபெட் நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் வருவாய் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? கடந்த 2018ம் ஆண்டில் இந்த ஆல்பாபெட் நிறுவனத்தின் வருவாய் 30.74 பில்லியன் டாலர் ஆகும். (இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) இதே காலத்தில் இதன் வருவாய் 136.82 பில்லியன் டாலர்களாகும். இதன் மொத்த சொத்து மதிப்பு 232.8 பில்லியன் டாலர்களாகும்.

இந்த நிறுவனத்தில் கடந்த 2018 அறிக்கையின் படி 1,03,549 ஊழியர்கள் பணி புரிந்து வந்துள்ளனர். அவ்வாறு தாய் நிறுவனமாக்கப்பட்ட ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாகியாக லாரி பேஜும், தலைவராக செர்ஜி பெரினும் பொறுப்பு வகித்தனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இருவரும் ஆல்ஃபபெட் நிறுவனத்தில் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். எனினும் தாங்கள் பங்குதாரராகவும் மற்றும் இணை நிறுவனர்களாகவும் தொடர்ந்து செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுந்தர் பிச்சை தான் சரியான தேர்வு இது தொடர்பாக லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிறுவனத்தினை இன்னும் திறம்படச் செயல்பட வைக்க வழிகள் இருக்கும்போது நாங்களே அதை கையில் வைத்திருக்க விரும்பவில்லை. அதை நாங்கள் என்றுமே நினைத்தது கிடையாது.

சுந்தர் பிச்சை நமது பயனாளர்கள், ஊழியர்கள், என அனைத்து தரப்பினரிடமும் தொழில் நுட்பம் தொடர்பான ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார். கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரை விட எவராலும் சிறப்பாக வழி நடத்திட முடியாது எனத் தெரிவித்துள்ளார்கள்.

தாய் நிறுவனத்தின் தலைமை பொறுப்பும் சுந்தர் பிச்சைக்கே கூகுளின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை, கடந்த 3ம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதேபோல், சுந்தர் பிச்சை ஒரே நேரத்தில் இந்த இரண்டு நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியாகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பின் படி இவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதனைத் தொடர்ந்து ஆல்பாபெட் நிறுவனம், சுந்தர் பிச்சையின் ஊதியத்தைப் தற்பொழுது பலமடங்காக உயர்த்தியிருக்கிறது.

அல்பாபெட் நிறுவனத்தின் முடிவுப்படி, ஆண்டு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு ஊதியமாக வழங்கப்படப்போகிறது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படும் 2 மில்லியன் டாலர் ஊதியம், இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் ரூ.14.22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.707 கோடி ஊக்கத் தொகையா? இதைக்கேட்டு உங்களில் சிலர் ரூ.14.22 கோடி ஊதியமா என்று ஆச்சரியத்தில் இருப்பீர்கள். உங்களுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருக்கிறது, அடுத்த மூன்றாண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஆல்பாபெட் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து சுமார் 240 மில்லியன் டாலர்கள் வரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.707 கோடி ரூபாய் சுந்தர் பிச்சைக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுவே முதல்முறை மிகப்பெரிய தொகையைப் பரிசாகப் பெறுவது சுந்தர் பிச்சைக்குப் புதிதல்ல என்றாலும் கூட, நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆல்பாபெட் நிறுவனம் அறிவித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

இந்த செய்தி தற்பொழுது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகிவருகிறது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை இதற்கு முன்பு, கடந்த 2016ம் ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகையாக சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

இந்த 200 மில்லியன் ஊக்கத்தொகை நிறுவனத்தின் பங்குச் சந்தை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊக்க தொகையை நிராகரித்த பிச்சை அதிகமாகச் சம்பளம் பெற்றதாக உணர்கிறேன் என்று கூறி, சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிலிகான் வேலியில் சில ஊழியர்கள் வாழ்வதற்கே கஷ்டப்படும்போது, சுந்தர் பிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் என்று ஆல்பாபெட் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

thamillanka.com