இலங்கை மாணவிகளின் பூதவுடல் 24 மணித்தியாலத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்படும்…..!

52

அஸர்பைஜானில் தீ விபத்துக் உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளின் பூதவுடலை 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு எடுத்து வர முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரச செலவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் பற்றிய பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. 

தெஹ்ரானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அஸர்பைஜான் அரசாங்கம் இது பற்றி அறிவித்துள்ளது.

THAMILLANKA.COM