அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் நட்ச்சத்திர பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தான் கிரிக்கெட் விளைபாடுவதற்கு பயன்படுத்திய தொப்பி “பேகி கிரீன்“ ஜை ஏலத்தில் விற்றுள்ளார்.

இவரது இந்த தொப்பி இலங்கை மதிப்பிற்கு சுமார் 12.5 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நினைவுப் பொருட்கள் வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட நினைவுப் பொருள் என்ற பெருமையை இந்த தொப்பி பெற்றுள்ளது.

முன்னதாக உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டில் 3 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது, அந்த சாதனையை ஷேன் வார்னின் தொப்பி முறியடித்துள்ளது.

அவுஸ்ரேலிய நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ஹெக்டேர் பரப்புள்ள காட்டுப் பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகின. பல லட்சக் கணக்கான விலங்குகளும் பல மனிதர்களும் இதனால் உயிரிழப்பை சந்தித்து உள்ளனர்.

ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். இந்நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்கள் பொருட்களை ஏலத்தில் விற்று வருகின்றனர்.

அந்த வகையில் அவுஸ்ரேலியாவின் நட்ச்சத்திர பந்து வீச்சாளரும் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ள ஷேன் வார்ன் தான் பயன்படுத்திய தொப்பி “பேகி கிரீன்“ னை ஏலத்தில் விற்று அந்த தொகையை பாதிக்கபட்டவர்களுக்கு உதவ கொடுத்துள்ளார்.

thamillanka.com