சபரிமலை ஜயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றில் மறுசீராய்வு மனு

32

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சபரிமலை தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு சில விளக்கங்களை கொடுத்துள்ளது.

அதாவது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரணை என தெரிவித்துள்ளது.

பெண்கள் கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என விசாரிக்க உள்ளதாகவும் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளை தான் விசாரிக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காலாமா என்பது மட்டும் குறித்து விசாரிக்கப்போவதில்லை எனவும் மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா? அதை கடைபிடிக்கலாமா? என்பது குறித்து நுணுக்கமாக கவனிக்க இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்கு காரணமானவர்களை பிடித்து என்கவுண்டர் செய்ய வேண்டும்
பிரின்ஸ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்

சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு

பிற்குறிப்பு

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்

பெண்களை அனுமதி வேண்டும் என தீர்ப்பெழுதிய ஒரு நீதிபதி கூட புதிய அமர்வில் இல்லை

9பேர் கொண்ட அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியே உள்ளார்.

thamillanka.com