நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 18 நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு நாரஹேன்பிட மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்னவிற்கு பிணை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த மனு ஜனவரி மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

THAMILLANKA.COM