பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவரது முதல் உத்தியோகபூர்வமாக அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியா செல்கிறார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜனாதிபதி எனது சொந்த கொள்கையின் பிரகாரம் அவரது தூது கோஷ்டியில் குறைந்தளவு முக்கியஸ்தர்களை அழைத்து செல்கின்றமை குறிப்பிடதக்கது.

இந்தியா செல்லும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு நாடுகளின் உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் சம்பந்தமாக விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதையடுத்து அவர் வாரணாசியில் உள்ள மகாபோதிக்கும், ஆந்திரா பிரதேசத்திலுள்ள திருப்பதிக்கும் வழிபாட்டுக்காக செல்ல உள்ளார். இந்தியா ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி ஏற்றவுடன் தனது நாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அவர் அங்கு சென்று, வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணிய ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று அண்மையில் இந்திய சென்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சென்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்தியா சென்ற போது நரேந்திர மோடியை, இலங்கை விஜயம் செய்ய அழைப்பு விடுத்திருந்தார் அதேபோல பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் மோடியை சந்திக்கும் போது அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thamillanka.com