இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 போட்டி நாளைய தினம் 10 திகதி நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கு பின்னர் வருகின்ற 14ம் திகதி அவுஸ்ரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பணயம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.

இப் போட்டிக்காக அவுஸ்ரேலிய அணி இன்று இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது. புறப்படுவதற்கு முன்னார் அவுஸ்ரேலிய அணியின் அதிரடி ஆட்ட நாயகன் டேவிட் வோர்னர் தனது இன்ஸ்டகிறாம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இவர் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதில் ”நாங்கள் இந்தியா வருகின்றோம்..3 போட்டிகள் கொண்ட தொடர் மிக சிறப்பானதாக அமையவுள்ளது.எங்களுடைய அனைத்து ரசிகர்கயும் காண ஆவலாக உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

thamillanka.com