Funeral tomorrow for Talawakele youth

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த யுவதி ஒருவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் பாயந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட இளைஞரின் இறுதி கிரியைகள் நாளை தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அவரின் சடலம் உறவினர்களிடம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த யுவதி வைத்தியசாலையிலி் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயற்சித்த யுவதி தமிழ் பெண் ஆவார், அவரை காப்பாற்ற சென்று உயிரிழந்தவர் முஸ்லிம் இளைஞர் என்பதோடு, நீந்தி யுவதியை கரைசேர்த்த பொலிஸ் உத்தியோகத்தர் பௌத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.