Corona shocked woman

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை தொடர்ந்து கொரோனா தொற்று காணப்படுவதாக ஹோமாகம வைத்தியசாலையால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் மேலதிக மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்க வேறேதேனும் நோய்கள் காணப்படுகின்றதா என பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.