Possibility of postponing election for 3 or 4 weeks ...!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என்பதால் அந்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றம் கோரியுள்ளார்.

கடந்த 4 நாட்களாக குறித்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதற்கு அதில் சட்டரீதியான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வந்த நிலையில், 5 ஆம் நாளான இன்றும் முற்பகல் ஆராய்வு தொடர்ந்து இடம்பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என தெரிவித்துள்ள சட்ட மா அதிபர் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் ஆராயாப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.