இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இத் தொடரின் முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் அகுசியாடின் ஸ்டேடியம், புனேயில் இன்று இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்ப தெரிவு செய்ய அதன்“படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்ச்ச ஓட்டமாக லோகேஷ் ராகுல் 54 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அதிகபட்ச்ச விக்கெட்டாக லக்ஷன் சண்டகன் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 201 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச்ச ஓட்டமாக தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களையும்,ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் அதிகபட்ச்ச விக்கெட்டாக நவ்தீப் சைனி 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியில் 78 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

thamillanka.com