இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இத் தொடரின் முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது டி-20 போட்டி இந்துர் மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணயசுழற்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி களம் புகுந்தது.

இதன் ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து இலங்கை அணி 142 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்ச்ச ஓட்டமாக
குசல் பெரேரா 34 ஓட்டங்களையும்,அவிஷ்கா பெர்னாண்டோ 22 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச்ச விக்கெட்டாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 143 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களம் புகுந்த இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச்ச ஓட்டமாக லோகேஷ் ராகுல் 45 ஓட்டங்களைக் குவித்திருந்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வாணிந்து ஹசரங்கா 2 விக்கெட்களை அதிகபட்ச்சமாக வீழ்த்தியிருந்தார்.

இப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

thamillanka.com