அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இதுவரை கண்டுபிடடிக்கப்படாத மிகப் பழமையான விண்கல் துகள்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1969களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. 

முர்ஷிசன் விண்கல்லில் இருந்த சூரியனை விட பழமையான துகள்களில் சில (உள்படம்). முட்டை நெபுலா (படம்) போன்றதொரு நட்சத்திரத்தில் இருந்து இது வந்திருக்கலாம்.

இந்த விண்கல் துகள்கள் சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தன எனவும் இந்த துகள்கள் நமது சூரிய குடுப்பத்தை விட பழமை வாய்ந்தன எனவும் கூறப்படுகிறது.

1969ல் இந்த முர்ஷிசன் விண்கல் பூமியில் விழுந்தது

இவை எவ்வளவு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கண்டறிவதற்காக விண்வெளியில் அண்டக் கதிர்கள் (Cosmic rays) எவ்வளவு காலம் இந்தத் துகள்களில் விழுந்துள்ளன என்பது ஆராயப்பட்டு, அதை பொருத்தே அவை எவ்வளவு பழமையானவை என்று கண்டறியப்பட்டன.

சூரியனுடைய வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என்பதையும், புவியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த துகள்கள் நமது சூரியக் குடும்பத்தைவிட எவ்வளவு பழமை வாய்ந்தது என்பது புரியும்.

thamillanka.com