நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதை அடுத்து கடந்த வெள்ளியன்று அரசாங்கம் ஊடரங்கு சட்டைத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்றுகாலை கொழும்பு உள்ளிட்ட எட்டு மாவட்டகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகலில் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது வீடுகளில் அடங்கி இருந்த மக்கள் உண்வுப்பொருட்களை வாங்குவதற்காக வெளியேறி இருந்தனர்.

இதன்போது ஒரு நாளும் மக்கள் கூடாத கொழும்பு, குணசிங்கபுர பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க சுப்பர் சென்டரில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்றிருந்தனர்.

எப்பொழுதுமே கடைகளில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் கொரோனா அச்சதால் வரிசையில் நின்று காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றதை அவதானிக்க முடிந்தது.