வடதுருவப் பகுதியான ஆர்க்டிக் பிரதேசத்தில் மிகப்பெரிய பனிப்பிரதேசமே முற்றிலும் காணாமல் போனது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் வடக்குப் பகுதியில் 3 லட்சத்து 86 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுள்ள மிகப்பெரிய பனிப்பிரதேசம் இருந்தது.

கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக இந்தப் பகுதியில் பனி உருகும் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தற்போது அந்தப் பனிப்பிரதேசத்தின் 95 விழுக்காடு பனி கரைந்து போனதாக அமெரிக்க நிலவியல்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே வேகத்தில் பனிகரையுமானால் வரும் 2030ம் ஆண்டுக்குள் மீதமுள்ள 5 விழுக்காடும் மாயமாகி விடும் என்று எச்சரித்துள்ளனர்.

35 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த வீடியோவை டைம்லாப்ஸ் (timelapse) முறையில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

THAMILLANKA.COM