பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!..

11

பனை மரம் நமக்கு நிறைய பயனுள்ள பொருட்களை தருகிறது.அதில் ஓன்று தான் இந்த பனங்கிழங்கு.

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலிமை சேர்க்கும்.

பனங்கிழங்கை வேகவைத்து அதனை சிறிய துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகள் பலம் பெறும்.

பெண்கள் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலம் அடையும்.

பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் உள்ளது.பனங்கிழங்கை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீர் பாதிப்பு மற்றும் வயிறு பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவாக்கி அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் பசி நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனங்கிழங்கில் பித்தம் அதிகமாக உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின்பு மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும்.

THAMILLANKA.COM