ஐஸ்வர்யா ராய்தான் என் அம்மா என்று வாலிபர் ஒருவர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மங்களூரைச் சேர்ந்தவர் சங்கீத்ராய் குமார். இவருக்கு வயது 31 .

இவர் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்தான் தன்னை பெற்றெடுத்த தாய் என்று கடந்த ஆண்டு இவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதில், ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரித்தல் மூலம் லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார் என்கிறார்.அவரின் கூற்றுப்படிஇவர் பிறக்கும்போது க்கு வயது 15 ஆக இருந்திருக்க வேண்டும்

மேலும், என் அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணமானாலும் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் என்னுடன் வசிக்க வேண்டும். என் அம்மாவை மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது தர வேண்டும். எனக்கு என் அம்மா வேண்டும்’ என்று கூறியிருந்தார் சங்கீத் ராய் குமார். ஆனால், ஐஸ்வர்யாதான் தனது அம்மா என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதை மீண்டும் கூறியிருக்கிறார் சங்கீத்குமார். அதில்இ இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா ராயும் தாத்தா கிருஷ்ணராஜ் ராயும் பார்த்துக்கொண்டனர்.

பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு வளர்ந்தேன். எனது உறவினர்கள் என் பிறப்பு சான்றிதழ்களை அழித்துவிட்டனர். நான் மும்பையில் என் அம்மா ஐஸ்வர்யா ராயுடன் வசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thamillanka.com