முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியந்தஸ்தர் ஒருவர் காணப்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிலே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமானால், முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவையும் விசாரிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் விசாரணைகளை அர்ரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

thamillanka.com