தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அசுரன் படம் 100 நாட்களை கடந்துள்ளது இந்நிலையில் படத்தின் 100வது நாள் விழாவில் கூட சமீபத்தில் கலந்து கொண்டார் தனுஷ்.

மேலும் தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலான சுருளி படத்தில் நடித்து முடித்து விட்டு தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். தற்போது மாறி செல்வராஜின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பின்னர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.

லிவிங் லெஜெண்ட் என்று போற்றப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறித்து தற்போது கோலிவுட் வட்டாரங்கள் முழுக்க பேசப்பட்டு வருகிறது. தனுஷ் நடிக்கும் முதல் வாழ்க்கை வரலாற்று படம் என்பது குறிப்பிடத்தக்கது.

thamillanka.com