கடந்த ஜனவரி 8 ம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து உக்ரைன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானம் 176 பயணிகளுடன் உக்ரைன் நாட்டின் போரிஸ்பில் நகரை நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் தாக்கப்பட்டதில் பயணித்த அனைத்து பயணிகளும் இறந்தனர்.

இது முதலில் தொழில்நுட்ப்ப கோளாறு காரணமாக இடம் பெற்றது என ஈரான் கூறி வந்த நிலையில் பின்பு தமது ராணுவம் தான் போர் பதற்றத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என ஒப்புக் கொண்டது.

இந்த விமாகத்தில் பணயித்த ஏராளமான பயணிகள் ஈரான் மற்றும் கனடாவைச் செர்ந்தவர்கள் மற்றும் சுவீடன்,ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்சந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமது சேந்த நாட்டு மக்கள் 88 பெர் கொன்றதற்காக ஈரான் நாட்டு அரசை எதிர்த்து அந்த நாட்டுமக்கள் போராட்டத்தில் குதித்து ஈரானிய அதிபரை பதவி விலக வலியுருத்தி வருகினற்னர்.

ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஆலோசனை நடத்த முடிவெடுத்தள்ளன.

இது குறித்து உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரைஸ்டய்கோ கூறியதாவது:- உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும், நஷ்டஈடு தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசிக்க முடிவு செய்துள்ளன.

விமான விபத்தில் பலியானவர்களின் நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு வருகிற 16-ந் தேதி லண்டனில் ஒன்று கூடி ஈரான் மீது சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளது. இதில் கனடா, சுவீடன், உக்ரைன், ஆப்கானிஸ்தான் உள்பட 5 நாடுகள் பங்கேற்கின்றன.

thamillanka.com