வடமாகணத்தில் உள்ள 2427 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விடிவு ஏற்படுமா??

25

எனக்கு தெரிந்த வரையில் வடமாணத்தில் மொத்தமாக 1570 முன் பள்ளிகளும் அதில் ரூபா 6000 சம்பளம் பெறும் 2427 ஆசிரியர்களும், 588 சிங்கள, தமிழ் ஆசிரியர்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு படையின் கீழ் இயங்குகின்றனர். இவர்களுக்கு மாதம் 32000 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.

தமிழ் முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண சபையில் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்றன.இந்த அமைச்சு மாதம் 6000 ரூபா சம்பளமாக வழங்குகிறது.அத்துடன் இந்த முன்பள்ளிகளை உருவாக்கியுள்ள அந்ந அந்த கிராம நகரங்களில் உ்ள்ள பொது சேவை அமைப்புகள் முன்பள்ளிகளிடம் கல்வி கற்க வரும் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தில் இருந்தும் மாதாந்தம் 3000 ரூபா வழங்கப்படுகின்றது.

நீண்ட காலமாக தமிழ் முன்பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு கிடைக்கும் சொற்ப அளவு சம்பளத்துடன் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாமல் திண்டாடுவதை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.

அண்மையில் நான் சுன்னாகத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பணி புரியும் இரண்டு டசினுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.அவர்களுடன் பேசும் போது அவர்களுக்கு ஆரம்ப மாத சம்பளமாக ரூபா 32000 தையே அரசு வழங்குவதாக கூறினார்கள். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

எனக்கு தெரிந்த மட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு சபையினர் 200 தொடக்கம் 250 தமிழர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.இந்த வேலையை செய்யும் தமிழ் இளைஞர்,யுவதிகளுக்கு ரூபா 45000 சம்பளமாக வழங்குகின்றது.

மேலும் இந்த வேலை இலங்கை அரசாங்கத்தினால் ஓய்வூதியம் வழங்கப்படும் நிரந்தர வேலையாக உள்ளது.மேலும் இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு காலை,மதியம் ஆகிய இரு வேளைகளும் இலவச உணவு வழங்குகிறது. ஆனால் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வெறும் 32000 ரூபா மட்டும் வழங்கப்படுவது மிகவும் கவலைக்கிடமானது.

எனவே என்னோடு பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினேன் “கடன் தொல்லைகள் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை நடத்துபவர்கள் இருந்தாள் கை உயர்த்த சொன்னேன்” எந்த ஆசிரியர்களுமே உயர்த்தவில்லை

அதையடுத்த உங்கள் நிலை என்னவென்று அவர்களிடம் கேட்டேன் அனைவருமே தங்கள் கடன்களைப் பற்றி கதை கதையாக கூறினார்கள்.வங்கியில் கடன், நிதி நிறுவனங்களிடம் கடன்,அயலவர்களிடம் கடன்,கந்து வெட்டி கடன், நகை அனைத்தும் அடகு,வாழும் வீடு கூட ஈட்டில் உள்ளது என ஒப்பாரி வைத்தனர்.

ரூபா 32000 பெறும் ஆசிரியர்களின் நிலைமையே இப்படி என்றால் மாதாந்தம் 6000 ரூபா சம்பளம் பெறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைக்கும் போது எனக்கு பயமாக உள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகக் குறைந்தது 6 பாடம் சித்தியடைந்திருக்க வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பாடம் சித்தியடைந்திருக்க வேண்டும். அத்துடன் கணிதமும் சித்தியடைந்திருக்க வேண்டும். மேலும் இந்த பாடசாலையில் கல்வி கற்பிற்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு வருட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி ஆசிரியர் பரீட்சையில் டிப்லோமா பெற்றிருக்க வேண்டும்.

வடமாகாணத்திற்கு முதன் முதலில் 2010ம் ஆண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் ஆளுனர் ஜீ.ஏ. சந்திரஸ்ரீ இருந்த காலத்தில் நியமிக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் 1500 ஆசிரியர்கள் 3000 ரூபா மாத சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டனர்.பின்னர் 2013ம் ஆண்டு மாகாண சபை தேர்தலின் பிற்பாடு படிப்படியாக முன்பள்ளி அசிரியர்களின் சம்பளம் ரூபா 6000 ஆக உயர்த்தப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனக்கு தெரிந்த தகவலின் படி ஜனாதிபதி கோட்டாபயவின் அரசு முன்பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்திற்கு முயற்ச்சி எடுத்து வருவது போல் தெரிகிறது. வடமாகாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியினரிடம் அவரவர் பகுதியில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

சிவில் பாதுகாப்பு சபையின் கீழ் இயங்கும் 588 தமிழ்,சிங்கள ஆசிரியர்களுக்கு தலா 32000 ரூபா மாதாந்த சம்பளம் வழங்கபடுவது போல ரூபா 6000 வழங்கப்படும் ஏனைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இதே 32000 சம்பளம் வழங்க ஜனாதிபதி கோட்டாபய முன்வந்துள்ளாரா??

அவ்வாறு செய்தால் முக்கியமாக நான் அவரை பாராட்டாமல் இருக்கமாட்டேன்.

thamillanka.com